600 வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்... பிரதமர் மோடி காங்கிரசுக்கு கடும் கண்டனம் !

 
மோடி

 இந்தியாவில் நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இந்த கடிதத்தில் அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக் காக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.   மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோர்   “நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடவும்  சுயநலக் குழுக்கள் முயற்சித்து வருகின்றன. அரசியல் மற்றும் ஊழல் வழக்குகளில்  சிக்கியுள்ள அரசியல் பிரமுகர்கள் அழுத்தம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை நீதிமன்றத்தையும், நீதியையும் பாதித்து ஜனநாயகத்துக்கே சவால் விடும் வகையில் உள்ளது.  

இது குறித்து பிரதமர் மோடி மற்றவர்களைத் துன்புறுத்துவதும் கொடுமைப்படுத்துவதும் பழங்கால காங்கிரஸ் கலாச்சாரம். 50 ஆண்டுகளாக  அவர்களே 'உறுதியான நீதித்துறை'க்கு அழைப்பு விடுத்தனர் - அவர்கள் வெட்கமின்றி தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களிடமிருந்து அர்ப்பணிப்பை விரும்புகிறார்கள், ஆனால் தேசத்திற்கான எந்தவொரு அர்ப்பணிப்பிலிருந்தும் ஒதுங்குகிறார்கள்," என்று பிரதமர் மோடி வன்மையாக கண்டித்துள்ளார்


 

 

 

கடந்த காலம் தான் பொற்காலம் என்ற தவறான கருத்தை உருவாக்கவே இக்குழு முயற்சிக்கிறது.நீதிமன்றங்களின் முடிவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.  இக்குழு   சமூக ஊடகங்கள் மூலம் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. மேலும் இதற்கு முந்தைய காலங்களில் நீதிமன்றங்களில் செல்வாக்கு செலுத்துவது எளிதாக இருந்ததாக கூறுகின்றனர். அவர்களின் கோமாளித்தனமான நம்பிக்கைகள் சூழலை கெடுப்பதாக அமைந்துள்ளன. நீதித்துறையின் செயல்பாட்டையும் பாதிக்கிறது.   அரசியல் மற்றும் தொழில்முறை அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காக்க வேண்டியது மிக மிக அவசியம்.  இந்த போக்கிற்கு அமைதியாக இருப்பது அல்லது எதுவும் செய்யாமல் இருப்பது, தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும்.  


இது போன்ற முயற்சிகள் சில வருடங்களாக அடிக்கடி நடக்கத் தொடங்கியுள்ளன. கண்ணியத்துடன் மௌனம் காப்பதை விடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது” என எழுதப்பட்டுள்ளது.  இந்த கடிதத்தில் ஆதிஷ் அகர்வாலா, சேத்தன் மிட்டல், பிங்கி ஆனந்த், ஹிதேஷ் ஜெயின், உஜ்வாலா பவார், உதய் ஹொல்லா, உதய் ஹொல்லா உட்பட மூத்த வழக்கறிஞர்கள் பலர்  கையெழுத்து இட்டுள்ளனர். மேலும் இந்த கடிதத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட வழக்கு அல்லது குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தபோதிலும்  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை  தொடர்ந்து எழுந்து வரும்  கேள்விகளின் பின்னால் இருக்கும் உள்நோக்கத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web