உலகிலேயே பெண்கள் மட்டும் பணிபுரியும் வாகன தொழிற்சாலை!

 
உலகிலேயே பெண்கள் மட்டும் பணிபுரியும் வாகன தொழிற்சாலை!


இந்தியாவில் பெட்ரோல் விலை பல மாநிலங்களில் 100க்கும் அதிகமாக உள்ளது. இதனை அடுத்து பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஓலா நிறுவனம் ஓசூர் அருகே உள்ள ஓலா ஈ- ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கியுள்ளது. இதில் 10,000 பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே பெண்கள் மட்டும் பணிபுரியும் வாகன தொழிற்சாலை!

முழுக்க முழுக்க பெண்களே பணியாற்றும் உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு தொழிற்சாலையாக ஓலா நிறுவனம் அமையும் என அதன் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.அதன்படி தொழிற்சாலையில் பணியாற்ற உள்ள முதல் பெண்கள் குழுவினருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலகிலேயே பெண்கள் மட்டும் பணிபுரியும் வாகன தொழிற்சாலை!

தயாரிக்கப்படும் ஒவ்வொரு வாகனத்தின் முழு உருவாக்கத்திற்கும் பெண்களே பொறுப்பாவார்கள் எனவும், பொருளாதார வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்குவது அவர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பத்தை மட்டுமல்ல முழு சமூகத்தையும் மேம்படுத்த உதவும். அதானாலேயே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web