*தமிழக அரசின் இலவச UPSC சிவில் சர்வீசஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - அக்.20 கடைசி தேதி!

 
யுபிஎஸ்சி  UPSC தமிழக அரசு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் 2027-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்காக அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் திட்டம் இணைந்து சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

சென்னை மையம்த்தில் முழுநேரப் பயிற்சி – 225 இடங்கள்; பகுதிநேரப் பயிற்சி – 100 இடங்கள். மதுரை மையம்: முழுநேரப் பயிற்சி – 100 இடங்கள். கோயம்புத்தூர் மையம்: முழுநேரப் பயிற்சி – 100 இடங்கள். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 20, 2026.

முதற்கட்ட தேர்வுப் பட்டியல் வெளியீடு: அக்டோபர் 22, 2026.

 UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு

கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு: அக்டோபர் 25 முதல் அக்டோபர் 27, 2026 வரை (சென்னை "காஞ்சி" வளாகத்தில் நடைபெறுகிறது). வகுப்புகள் தொடங்கும் நாள்: அக்டோபர் 28, 2026.

கடந்த செப்டம்பர் 6, 2026 அன்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்திய மதிப்பீட்டுத் தேர்வில் பங்கேற்று, மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தகுதியுடைய நபர்கள் www.civilservicecoaching.com](http://www.civilservicecoaching.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

UPSC Exam

தரவரிசை மற்றும் அரசின் இடஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். முழுநேரப் பயிற்சிக்குத் தேர்வாகும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.