தூக்கத்திலேயே நடந்து காட்டுக்குள் சென்று படுத்து தூங்கிய சிறுமி... அதிர்ச்சி வீடியோ!

 
பெய்டன்

 தூக்கத்தில் பலரும் உளறுவதுண்டு. சிலர் தூக்கத்தில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின. சிறுமி ஒருத்தி தூக்கத்தில் நடந்து சென்று வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள காட்டுக்குள் சென்று படுத்துக் கொள்கிறார். இந்த விநோத சம்பவம் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது.  ஷ்ரெவ்போர்ட் பகுதி அருகே பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி 10 வயது பெய்டன் செயின்டிக்னன் . இவருக்கு தூக்கத்தில் நடக்கும் சோம்னாம்புலிசம் என்ற வியாதி உள்ளது.  இரவில் சிறுமி பெய்டன், வீட்டில் இருந்து வெளியேறி தூக்கத்திலேயே நடந்து, லூசியானா காட்டு பகுதிக்குள் சென்றுவிட்டாள்.  


சிறுமியை தேடி பெற்றோர் அவரை பல  இடங்களில் சென்று  தேடிப் பார்த்துள்ளனர். இந்த தகவல் அறிந்து போலீசார்  சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், டிரோன் இயக்குபவரான ஜோஷ் குளோபர் என்பவர் உதவியால் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளார். டிரோன் பறந்து 20 நிமிடங்களுக்கு பின்னர் சிறுமி கண்டறியப்பட்டாள்.
சிறுமி  வெள்ளை மற்றும் ஊதா நிறத்திலான பைஜாமா உடையணிந்து காணப்பட்டார். காட்டில், தரையில் சுருண்டு படுத்து கிடந்த சிறுமியை அவளுடைய தோழியின் தந்தை மற்றும் பலர் சேர்ந்து மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். சிறுமி 1.5 மைல் தொலைவுக்கு நடந்து வந்து காட்டுக்குள் படுத்து தூங்கியுள்ளார்.  வீட்டில் இருந்து சென்ற அந்த சிறுமி காட்டுக்குள் அலைந்து, திரிந்திருக்கிறாள். 

பெய்டன்
பின்னர் ஓரிடத்தில் படுத்து தூங்கி விட்டாள். நல்லவேளையாக, கொசுக்கள் கடித்தது தவிர வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.   சிறுமியை டிரோன் உதவியுடன் காட்டில் இருந்து மீட்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  
இந்த தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கான சரியான காரணம் என்னவென்று தெரியவரவில்லை. பெற்றோர்களுக்கு  இந்த வியாதி இருந்தது என்றால், குழந்தைகளுக்கும் இது ஏற்படும். இதற்கான சாத்தியம் 47 சதவீதம்  இருந்தது . இந்த சிறுமி பருவ வயது வரும்போது, அதில் இருந்து தானாக  வெளியே வந்து விடுவார் என்கின்றனர் மருத்துவர்கள்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web