லண்டன் பயணம் வெற்றி... தமிழகத்தில் ரூ. 300 கோடி முதலீட்டுக்கான 3வது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் விஜய் கையெழுத்து!
Sep 14, 2026, 20:10 IST
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டின் மின்சாதன உற்பத்தித் துறையை மேம்படுத்தும் வகையில் மேலும் ரூ. 300 கோடி முதலீட்டை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்சாதன உற்பத்தித் துறையில் ரூ.300 கோடி அளவுக்கு முதலீடு செய்ய வில்சன் பவர் சொல்யூசன்ஸ் நிறுவனத்துடன் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த நிகழ்வில் வில்சன் பவர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஹரிகிருஷ்ணா மலேபதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். முதல்வர் விஜய்யின் இந்தப் பயணத்தின் மூலம் ஏற்கெனவே ரூ.12,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், தற்போது இந்த மூன்றாவது ஒப்பந்தமும் வெற்றிகரமாக ஒப்பந்தமாகியுள்ளது.
