கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய காதலன்.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு நர்சிங் மாணவி விபரீத முடிவு !

 
பிரபாவதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த பிரபாவதி (20), என்ற இளம்பெண் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். பெற்றோருடன் வசித்து வந்த பிரபாவதி நேற்று தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு அவர்கள் திரண்டு கதறி அழுதனர்.

தகவல் அறிந்த சென்ற திருவெண்காடு போலீசார் பிரபாவதி உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரபாவதியின் தந்தை முருகவேல் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

பிரபாவதி

போலீசார் நடத்திய விசாரணையில் பிரபாவதி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதியிருந்ததை படித்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த கடிதத்தில், தானும் கொத்தனார் வேலை செய்து வரும் ஆனந்தராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தோம்.

இதனால் ஆனந்தராஜ் என்னிடம் நெருக்கமாக பழகி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் 3 மாத கர்ப்பம் அடைந்தேன். மேலும் ஆனந்தராஜிடம் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தேன். ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்தார். மேலும் ஆனந்தராஜ் மற்றும் அவரது சகோதரர் அலெக்சாண்டர், அண்ணி ரஞ்சனி ஆகியோர் ஆனந்தராஜை திருமணம் செய்து வைக்க முடியாது என்றும், நீ செத்து விடு என என்னிடம் கூறினர். இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன், என அந்த கடிதத்தில் பிரபாவதி குறிப்பிட்டுள்ளார்.

பிரபாவதி

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக அலெக்சாண்டர், ஆனந்தராஜ், ரஞ்சினி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web