“நாயகன் இன்று ஜனநாயகன்!" - முதல்வர் விஜய்க்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிறந்தநாள் வாழ்த்து!

 
ஆதவ்

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது ‘முதல்’ வரலாற்றுச் சிறப்புமிக்க 52-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் முதலமைச்சர் விஜய்க்கு, அவரது அமைச்சரவை சகாவான விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"நேரம் காலம் பார்க்காமல் எந்நேரமும் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு மக்கள் ஊழியனாகத் தமிழக முதலமைச்சர் விஜய் பணியாற்றி வருகிறார். ஒரு காலத்தில் திரையில் உச்ச நாயகனாகக் கொண்டாடப்பட்டவர், இன்று நிஜ வாழ்வில் ஒரு சிறந்த 'ஜனநாயகனாக' மாறி மக்களுக்குச் சேவையாற்றி வருகிறார். எளியவர்களின் கைகளில் ஆட்சிப் பொறுப்பை வழங்கி, தமிழ்நாட்டில் உண்மையான மக்களாட்சியை அவர் அலங்கரித்துள்ளார். உங்களது திராவிட, தமிழ் தேசியக் கொள்கைப் பாதையிலும், மக்கள் பணியிலும் என்றும் நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நின்று உடன் பயணிப்போம்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி இன்று காலை முதலே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.