நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த நபர்.. 7 ஆண்டுகளுக்கு பிறகு தட்டி தூக்கிய போலீசார்!

தீவட்டிப்பட்டி கொலை வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, உத்தனப்பள்ளியைச் சேர்ந்தவர் டாக்ஸி ஓட்டுநர் மாதவராஜ். அவரை மதுரைக்கு அழைத்துச் செல்ல வேலைக்கு டாக்ஸியை புக் செய்தவர்கள் ஓமலூர் அருகே மாதவராஜைக் கொன்று காரைத் திருடிச் சென்றனர்.
இந்த வழக்கில், பட்டார சுரேஷ், விமல்ராஜ், இளங்கோவன், செல்லா என்ற சந்திரசேகர் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சந்திரசேகர் என்ற செல்லா, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 7 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், ஓமலூர் டிஎஸ்பி சிறப்புப் படை போலீசாரால் அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்த சிறப்புப் படையினரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் பாராட்டினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!