காதலிச்சவனே புருஷன்... கல்யாண நாளில் தூக்கில் தொங்கிய 5 மாத கர்ப்பிணி!

 
பவானி
 காதலித்தவனே கணவனாக வாய்த்த அதிர்ஷ்டம் இருந்தும், வாழ முடியவில்லையே என்று உற்றாரும், உறவினர்களும் கதறியழுதனர். நேற்று தனது திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் 5 மாத கர்ப்பிணியான பவானி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சோழமாதேவியைச் சேர்ந்தவர் சக்திவேல். ஓட்டுநரான இவரும், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த பவானி என்பவரும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சில மாதங்களுக்கு முன்பு இருவரையும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பவானி 6 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.

வணிவரித்துறை  உதவியாளர்  தற்கொலை

கடந்த மாதம் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த பவானியை, கணவர் சக்திவேல் நேற்று வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அவர்களுக்கு திருமண நாள் என்பதால் வீட்டில் இருந்து அழைத்து வந்து, இருவரும் தங்களது வீட்டில் திருமண நாளை கொண்டாடியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே இரவு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் சக்திவேல் வீட்டில் இல்லாத போது தனியாக இருந்த பவானி திடீரென சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த சக்திவேல் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

அரியலூர் காவல் நிலையம்

பவானியின் தந்தை ரங்கநாதன் இது தொடர்பாக தா.பளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, கொலையா? தற்கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web