210 ஆண்டுகளுக்கு முன்பு தாஜ்மஹாலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பளிங்குக் கல் பிரிட்டனில் ஏலம்... ரூ.36 லட்சம் வரை விலை போக வாய்ப்பு!

 
தாஜ்மஹால்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் இருந்து சுமார் 210 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் அதிகாரி ஒருவர் எடுத்துச் சென்ற பூ வேலைப்பாடுகள் கொண்ட பளிங்குக் கல், வரும் டிசம்பர் 9-ஆம் தேதி பிரிட்டனில் ஏலம் விடப்பட உள்ளது. இந்த அரிய கல் ரூ.24 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரை விலை போகக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தாஜ்மஹால்

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய ராணுவ அதிகாரி கர்னல் பவ்னோல் பிலிப்ஸ் என்பவர், கடந்த 1816-ஆம் ஆண்டு ஆக்ரா தாஜ்மஹாலில் இருந்து அழகிய பூ வேலைப்பாடுகள் கொண்ட இந்தப் பளிங்குக் கல்லைத் தன்னுடன் பிரிட்டனுக்கு எடுத்துச் சென்றுள்ளார். அன்றிலிருந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக கர்னல் பவ்னோல் பிலிப்ஸின் குடும்பத்தினரிடமே இந்தப் பளிங்குக் கல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

தாஜ்மஹால்

தற்போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பளிங்குக் கல்லைப் பிரிட்டனின் புகழ்பெற்ற லயன் அண்ட் டர்ன்புல் ஏல நிறுவனம் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி ஏலம் விட உள்ளது.

தாஜ்மஹாலின் கலைநயத்தைப் பறைசாற்றும் இந்தப் பளிங்குக் கல், ஏலத்தில் ரூ.24 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரை விற்பனையாகும் என ஏல நிறுவனத்தினர் கணித்துள்ளனர்.