சிலிண்டர் விலை உயர்வுக்குப் பின் இருக்கும் 'மெகா' அரசியல்.. 80 பைசா கணக்கும் - உலகளாவிய எரிசக்தி போரும்!

 
கேஸ் சிலிண்டர் கேஸ் சிலிண்டர்

இந்தியாவில் கடந்த வாரம் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரப் பின்னணிகள் மிகவும் சிக்கலானவை. 

கடந்த மார்ச் 7ம் தேதி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. "ஏன் இந்த திடீர் விலை உயர்வு?" என்ற கேள்விக்கு விடை தேடினால்,  இந்த விலை உயர்வுக்கான காரணம் டெல்லியில் இல்லை, மாறாக மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைகளில் இருக்கிறது என்பது தான் கசப்பான உண்மை.

ஹார்முஸ் ஜலசந்தி - எரிபொருள் விநியோகத்தின் இதயத் துடிப்பு!

இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் சுமார் 60 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து (சவுதி அரேபியா, கத்தார்) இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, 'ஹார்முஸ் ஜலசந்தி' வழியாக வரும் கப்பல் போக்குவரத்து பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உலக அளவில் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதால், கப்பல் வாடகை மற்றும் காப்பீட்டுத் தொகை பலமடங்கு உயர்ந்துள்ளது.

சவுதி ஒப்பந்த விலை :  சர்வதேச அளவில் எல்.பி.ஜி விலையைத் தீர்மானிக்கும் 'சவுதி சி.பி' விலை கடந்த மூன்று மாதங்களில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. இதைக் கணக்கிட்டால் சிலிண்டர் விலை 130 ரூபாய் உயர்ந்திருக்க வேண்டும், ஆனால் அரசு அதன் பாதியை மட்டுமே அனுமதித்துள்ளது.

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

2. ஒரு நாளைக்கு 80 பைசா! - பொருளாதாரக் கணக்கீடு

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த 60 ரூபாய் உயர்வு என்பது ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தாது. ஒரு சிலிண்டர் 45 முதல் 60 நாட்கள் வரை வருகிறது என்று வைத்துக் கொண்டால், ஒரு நாளைக்கான கூடுதல் செலவு வெறும் 80 பைசா முதல் 1 ரூபாய் மட்டுமே. இது ஒரு டீ குடிக்கச் செலவிடும் தொகையை விட மிக  மிகக் குறைவு.

3. அண்டை நாடுகளுடன் ஒப்பீடு: இந்தியா எங்கே இருக்கிறது?

மார்ச் 2026 நிலவரப்படி, தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலை கட்டுக்குள்ளேயே உள்ளது: பாகிஸ்தான்: ரூ. 1,046, நேபாளம்: ரூ. 1,207, இலங்கை: ரூ. 1,241, இந்தியா (டெல்லி): ரூ. 913

4. உஜ்வாலா - ஏழைகளுக்கான பாதுகாப்பு கவசம்

மத்திய அரசின் 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ் உள்ள 10.5 கோடி குடும்பங்களுக்குச் சிலிண்டர் விலை உயர்வு ஒரு பொருட்டாகவே இல்லை. அவர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுவதால், அவர்கள் வெறும் 613 ரூபாய்க்கு சிலிண்டரைப் பெற முடிகிறது.

சிலிண்டர்

5. இது 1991 அல்ல... 2026-ன் பலமான இந்தியா!

சிலர் இந்த நிலையை 1991 பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், கூகுள் தரவுகளின்படி பார்த்தால் இன்றைய இந்தியா மிகவும் வலிமையாக உள்ளது: 1991-ல் வெறும் 1.2 பில்லியன் டாலர் மட்டுமே இருந்தது. இன்று அது 700 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மங்களூரு மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள ராட்சத நிலத்தடி சேமிப்பு கிடங்குகளில், இந்தியா பல வாரங்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைத்துள்ளது. இது எத்தகைய தட்டுப்பாடு வந்தாலும் சமாளிக்க உதவும். 

மொத்தத்தில் சிலிண்டர் விலை ஏறுறது கஷ்டம் தான். ஆனா இந்த 80 பைசா லாஜிக் காரணத்தை ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க. உலக நாடுகள் தத்தளிக்கும் போது இந்தியா நிஜமாகவே நிமிர்ந்து நிக்குது