ஹோலி கொண்டாட்டம்... இதென்ன மெட்ரோ ரயிலா? பெட்ரூமா? பயணிகளை அதிர வைத்த இளம்பெண்களின் வீடியோ!

கொண்டாட்டங்களுக்கு எல்லை ஏது... இளமையும் கொண்டாட்டங்களும் சேர்ந்து கொள்ளும் போது எல்லாமே வைரலாகி விடும் தானே? அப்படி மெட்ரோ ரயிலில் இளம்பெண்கள் இருவரின் ஹோலி கொண்டாட்டங்கள் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில், மக்களின் பிரதான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் அவ்வப்போது வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுவது வாடிக்கையாக இருக்கின்றது. நடனம் ஆடுவது, கவர்ச்சி உடையில் வலம் வருவது, தனிமையில் காதல் ஜோடிகள் செய்ய வேண்டியதை மக்கள் முன்னிலையில் மெட்ரோ ரயில் பயணத்தில் மேற்கொள்வது என சர்ச்சைகள் தொடரும்.
Happy Holi friends from all the way metro 🎉🎉 #holi #happyholi pic.twitter.com/H0sExl9Brp
— S M Faris (@farismohaab) March 22, 2024
இவ்வாறான செயல்களால் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்வோர் முகம் சுளிக்கும் நிலைமையும் உண்டாகும். இது தொடர்பாக பல்வேறு காணொளிகள் சர்ச்சைக்குரிய வகையில் வெளியாகி வைரலாகிய சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் களைக்கட்டி வருகிறது. இதனை முன்னிட்டு பலரும் தங்களுக்கு தெரிந்த வழிகளில் பண்டிகையை கொண்டாடி சிறப்பித்து வருகின்றனர். இதனிடையே டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இரண்டு இளம்பெண்கள், ரயிலில் தரையில் அமர்ந்து கொண்டு தங்களது முகத்தில் வர்ணங்களை பூசி கொண்டவாறு இருவரும் ரொமான்ஸாக தங்களது நட்பைக் கொண்டாடும் (?) வீடியோ காட்சிகளை வெளியாகி வைரலாகி வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!