வெள்ளை நிறத்தில் நுரைபடந்து துர்நாற்றத்துடன் காணப்படும் பாலாறு.. கலக்கத்தில் விவசாயிகள்..!

 
பாலாறு
பாலாற்று நீர் முழுவதும் வெண்மை நிறத்தில் நுரை ததும்பி துர்நாற்றத்துடன் காணப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் மாராபட்டு பகுதியிலுள்ள பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அருகாமையில் செயல்பட்டுவரும் தோல் தொழிற்சாலைகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விட்டதாக கூறப்படுகிறது.

கழிவுநீர் கலந்துவிடப்படுவதால் நுரை பொங்க செல்லும் ஆற்று நீர்....!

இதனால் ஆற்று நீர் முழுவதும் வெண்மை நிறத்தில் நுரை ததும்பி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே பலமுறை அப்பகுதி மக்கள் புகார் மனுக்கள் அளித்தும்  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பெயரளவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்  ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றில் கழிவு நீரை திறந்து விடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆம்பூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் மலை போல் பொங்கி வந்த வெள்ளை நுரை | Tamil  News The white foam that was raging like a mountain in a desert flood

இந்நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டு இருக்கக் கூடிய செயல் பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web