"ஷாம்பு, சோப்பால் நுரை வருதுன்னு சொன்ன அமைச்சருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்... என்னை மட்டும் அப்படி கலாய்ச்சீங்க!" - செல்லூர் ராஜு கிண்டல்!
நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்குப் பொதுமக்கள் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் சோப்புதான் காரணம் எனக் கூறிய சுற்றுச்சூழல் துறை அமைச்சரை, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, "ஷாம்பு மற்றும் சோப்பால் ஆற்றில் நுரை வருகிறது என்று சொன்ன அமைச்சருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். இது உலக மகா கண்டுபிடிப்பு" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

"நான் எகிப்தை ஈஜிப்ட் என்று சொன்னதற்கும், அதிகாரிகள் பேச்சைக் கேட்டு வைகை ஆற்றில் தெர்மாகோல் மிதக்கவிட்டதற்கும் என்னை என்னவெல்லாம் கிண்டல் செய்து ஓட்டினீர்கள்? ஆனால் இப்படிப் பேசிய அமைச்சரை யாரும் எதுவும் கேட்க மாட்டேங்கிறீங்களேப்பா! அட என்னங்கப்பா போங்கப்பா... அழுவ விடுறீங்கப்பா" என நகைச்சுவையாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் அரசியலுக்கு வருவது நல்லதுதான் என்று கூறிய அவர், "யார் வந்தாலும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. தனுஷைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை, தவெக-வினர் தான் பயப்படுகிறார்கள்" என்றார்.

"மாயையில் தவெக-வுக்கு வாக்களித்த மக்கள் தற்போது ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். கடந்த 6 மாத கால தவெக ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றமும் விலைவாசி உயர்வுமே தீபாவளிப் பரிசாகக் கிடைத்துள்ளது. முதலமைச்சர் விஜய்யிடம் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது" என்றும் குற்றம் சாட்டினார்.
