அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் தவெக எம்.எல்.ஏ.க்கள்.... இன்று விஜய் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்!

 
விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவது கட்சித் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த முதல்-அமைச்சரும், தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டுள்ளார். 

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில், தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பிய நபருடன் தவெக துணை சபாநாயகர் ரவிசங்கர் மோதியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் வெளியிட்ட விளக்க வீடியோவும் பின்னர் அவர் தெரிவித்த மிரட்டல் புகாரும் விவாதத்தை அதிகரித்துள்ளன. 

மேலும், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியருக்கு முறையற்ற குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் புகார்கள் தொடர்பாகக் கட்சி உள்விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய்

இந்நிலையில் இன்று நவம்பர் 11-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை பனையூரில் நடைபெற உள்ள கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த நான்கு எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரமும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது