'மணி மியூல்' மோசடி.. தமிழகத்தில் 837 பேர் கைது!

 
சைபர் க்ரைம்

தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய 2 நாள் தீவிரச் சிறப்புத் தேடுதல் வேட்டையில், 'மணி மியூல்' நிதி மோசடியில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தங்களது சொந்த வங்கிக் கணக்குகளைப் பிறரிடம் ஒப்படைத்து, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த அனுமதித்த நபர்களே இதில் சிக்கியுள்ளனர். இவ்வாறு பெறப்படும் வங்கிக் கணக்குகள் மூலம் 'டிஜிட்டல் கைது' மிரட்டல்கள், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பல இணையவழி நிதி மோசடிகளில் கொள்ளையடிக்கப்படும் பணம் கைமாற்றப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

ஷேர் பங்குசந்தை சாப்ட்வேர் மென்பொருள் கம்ப்யூட்டர் சைபர் க்ரைம்

தமிழக சைபர் கிரைம் பிரிவு மேற்கொண்ட 2 நாள் அதிரடி சோதனையில் மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட நபர்களின் குற்றப் பின்னணி மற்றும் பங்களிப்பின் அடிப்படையில், சிலருக்குக் காவல் நிலையத்திலேயே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகச் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.