முட்கள் மீது படுத்து ஆச்சரியப்படுத்திய துறவி... மகா கும்பமேளாவில் நெகிழ்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில் நடப்பாண்டில் இன்று ஜனவரி 16ம் தேதி மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. பிப்ரவரி 26ம் தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
இதற்காக 10000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15000 துப்புரவு பணியாளர்கள், 25000 தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மகா கும்பமேளாவில் பல ஆச்சரிய விசயங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் காந்தே வாலே பாபா என்ற துறவி முட்கள் பரப்பிய பகுதிக்கு, மேலாடை எதுவும் அணியாமல் செல்கிறார். கையில் சிறிய குச்சியுடன், இடுப்பில் சின்ன ஆடையும், தலையில் காவி நிற துண்டும் அணிந்தபடி, பரப்பியிருந்த முட்கள் மீது சாய்ந்து படுத்து கொள்கிறார்.
இதனை பார்த்து சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். இதுகுறித்து அவர் “ நான் குருவுக்கு பணிவிடை செய்கிறேன். குரு எனக்கு அறிவும், முழு பலமும் அளித்துள்ளார். இது எல்லாம் கடவுளின் மகிமை. அதுவே நான் இதனை செய்ய உதவுகிறது ” என கூறியுள்ளார். நான் கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாகவே, இதனை செய்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் முட்கள் மீது படுத்து வரும் செயலை செய்து வருகிறேன். ஏனென்றால், இது என்னுடைய உடலுக்கு பலனளிக்கிறது. அது ஒருபோதும் என்னை துன்புறுத்தியதில்லை. இதன் மூலம் எனக்கு கிடைக்கும் தட்சணையில் பாதியை நன்கொடையாக கொடுத்து விடுவேன். மீதமுள்ளவற்றை என்னுடைய செலவுகளுக்கு பயன்படுத்துவேன்” எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!