அடுத்த அதிர்ச்சி... ஜம்மு - காஷ்மீரில் வேகமெடுக்கும் மர்ம காய்ச்சல்.. 17பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் மர்ம காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரின் பூதல் கிராமத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல், வலி, குமட்டல், சுயநினைவு இழப்பு போன்றவை ஏற்பட்டு, அடுத்த சில நாட்களுக்குள் இறந்து விடுவதாக இறந்தவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
கடந்த டிசம்பர் 7ம் தேதியிலிருந்து டிசம்பர் 12ம் தேதிக்குள் யாஸ்மீன் என்பவரின் உடன்பிறந்தவர்கள், தாத்தா மற்றும் பாட்டி என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மர்ம காய்ச்சல் குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், “ஜே&கே சுகாதாரத் துறை மற்றும் பிற துறைகள் இறப்புகளை விசாரித்துள்ளன. ஆனால் சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. உள்துறை அமைச்சர் ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளார். "உண்மை வெளிச்சத்திற்கு வந்தவுடன் இதை நாங்கள் உங்களுக்கு விளக்குவோம்" என்று அவர் கூறினார். இந்த மர்ம காய்ச்சல் என்னவென்று தெரியாமல் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!