அம்மா...டியோவ்... 150கிலோ தலைமுடியை மட்டுமே திருடிச் சென்ற மர்மகும்பல்... ரூ7,00,000/- மதிப்பாம்!

ஹரியானா மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் மண்டேல் . இவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அதற்காக தன்னுடைய வீட்டில் பெண்களின் தலைமுடியை அதிக அளவில் வாங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை நேரத்தில் திடீரென ரஞ்சித் வீட்டிற்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. இந்த மர்ம கும்பல் அவர்கள் வீட்டில் இருந்த 150 கிலோ எடை கொண்ட தலைமுடியை திருடி சென்றது. இவற்றின் மதிப்பு ரூ 7,00,000 என்கிறார் ரஞ்சித். அத்துடன் ரூ 2 லட்சம் ரொக்க பணத்தையும் திருடிவிட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பக்கத்துக் கடையிலிருந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோதுதான் விஷயம் தெரிய வந்தது.இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அடிப்படையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!