திணறுது தேசிய நெடுஞ்சாலை... விடுமுறை முடிந்து சென்னை திரும்புபவர்களால் கடும் வாகன நெரிசல்!

 
போக்குவரத்து நெரிசல் தேசிய நெடுஞ்சாலை சொந்த ஊர்
வெள்ளிக்கிழமை புனித வெள்ளியை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழன் மதியத்தில் இருந்தே ஈஸ்டர் வரையிலான 3 நாட்கள் தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட பலரும் கிளம்பி செல்ல துவங்கினார்கள். 

இந்த தொடர் விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்து சென்னைக்கும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கியிருந்தது. 

அரசு பேருந்து

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

பொதுவாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்புபவர்கள் அவர்களது அலுவலக நேரம், குடும்பத்தோடு கிளம்புவது என்று வியாழனன்று இரவும், அடுத்த நாள் புனித வெள்ளியன்று காலையில் என கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. 

சென்னைக்கு திரும்புபவர்களின் வசதிக்காக பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் நிலையில்,  இன்று திங்கட்கிழமை விடுமுறை முடிந்து வாரத்தின்  முதல் நாள் என்பதால், சொந்த ஊருக்கு சென்றிருப்பவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் திரும்பியதால், திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் நிரம்பி திணறுகிறது. உளுந்தூர்பேட்டை தாண்டி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்துகள் ஊர்ந்து செல்லும் நிலையில் வாகன நெரிசல் உருவாகி இருக்கிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web