இன்று இந்தியாவில் அறிமுகமாகும் புது iQOO 5ஜி செல்போன்... 7600mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே.. என்ன விலை.. சிறப்பம்சங்கள் என்னென்ன?!
இன்று மதியம் 12 மணியளவில் புது iQOO 5ஜி செல்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 7600mAh பேட்டரி, சோனி கேமரா என்று இந்த ஸ்மார்ட்போனனில் மற்றும் அதிவேகச் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையிலேயே அரிதான 7,600mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
மிக நவீனமான Snapdragon 8 Gen 5 (3nm) சிப்செட் மூலம் இது இயங்குகிறது. கேமிங் அனுபவத்திற்காக அட்ரினோ 840 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவற்றுடன் இது வெளிவருகிறது.

50எம்பி சோனி LYT பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரையிலான மெமரி ஆப்ஷன்களில் இது கிடைக்கும் எனத் தெரிகிறது.
IP68 மற்றும் IP69 தரச் சான்றிதழ் பெற்ற வாட்டர் ரெசிஸ்டன்ஸ், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், மற்றும் 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும். இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் சுமார் ₹47,999 என்ற தொடக்க விலையில் அறிமுகமாகும் என்று ஆன்லைன் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அமேசான் தளம் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
