நெறைஞ்ச அமாவாசை... நடிகர் ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது!

 
கூலி ரஜினி

இன்று ஆனி மாத அமாவாசை தினத்தையொட்டி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது.  
 


 


முன்னதாக ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 10ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று காலை ஹைதராபாத்தில் ‘கூலி’ படப்பிடிப்பு துவங்கியது.
கூலி

படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’ திரைப்படம் ரஜினியின் 171வது திரைப்படமாகும்.

கிட்டத்தட்ட ஒருவார காலத்திற்கு மட்டும் அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். அதன்பிறகு, வரும் 10ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இதற்காக, பிரபல ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

From around the web