அடுத்த அட்ராசிட்டி... பெருங்கடலுக்கு தனது பெயரை வைக்குமாறு டிரம்ப் பேச்சு!

 
ட்ரம்ப் டிரம்ப்

அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் முக்கியப் பெருங்கடல்களில் ஒன்றின் பெயரை மாற்றுவது குறித்துப் பேசியுள்ளது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடல்களில் ஒன்றை 'டிரம்ப் பெருங்கடல்' அல்லது 'அமெரிக்காவின் பெருங்கடல்' என்று பெயர் மாற்றம் செய்யலாம் எனத் தெரிவித்தார்.

ட்ரம்ப்

ஏற்கனவே மெக்சிகோ வளைகுடா மற்றும் ஒண்டாரியோ ஏரியின் பெயர்களை மாற்றுவது குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்த அவர், தனது பதவிக்காலம் முடிவதற்குள் உலகின் ஒரு பெருங்கடலின் பெயரையும் மாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புவியியல் அமைப்புகளுக்கும் சர்வதேசப் பொதுப் பெயர்களுக்கும் எதிராக அமெரிக்க அதிபர் வெளிப்படையாகவே இதுபோன்ற யோசனைகளைக் கூறி வருவது அரசியல் மற்றும் புவியியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.