அடுத்த சர்ச்சை... ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சொகுசு வீட்டு அலமாரிகளில் ஆபாச பொம்மைகளும், பாலியல் சித்திரங்களும்!

 
ஜெஃப்ரி எப்ஸ்டீன்

அமெரிக்காவின் பெரும் செல்வந்தரும், பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிச் சிறையில் உயிரிழந்தவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பாரிஸ் குடியிருப்பில் எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரெஞ்சு செய்தித்தாளான 'லு பாரிசியன்' எப்ஸ்டீனின் பாரிஸ் குடியிருப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 2001-ஆம் ஆண்டில் அவர் வாங்கிய இந்த ஆடம்பரமான இல்லத்தில் கண்டறியப்பட்டுள்ள விஷயங்கள் உலகளவில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

எப்ஸ்டீன் கோப்பு ஸ்டீபன் ஹாக்கிங்

இந்த இல்லத்தின் அலமாரிகளிலும், டிராயர்களிலும் ஏராளமான பாலியல் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை மிக ரகசியமாகப் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. குடியிருப்பின் சுவர்கள் முழுவதும் பெண்களின் நிர்வாணப் படங்களாலும், ஆபாசமான ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது எப்ஸ்டீனின் வக்கிரம் நிறைந்த வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த இல்லத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பல மசாஜ் அறைகள் இருந்ததும், அங்குதான் பல இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் இளம் பெண்களைக் கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தபோது, 2019-இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்போது வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்கள், அவரது குற்றப் பின்னணியின் ஆழத்தையும், அவரது ரகசிய வாழ்க்கை முறையையும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.