அடுத்த அதிர்ச்சி... பள்ளிக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவி மாயம் - போலீசார் தீவிர விசாரணை!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துப்பரம்பா பகுதியில், பள்ளிக்குச் சென்ற 15 வயது சிறுமி காணாமல் போனது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன சிறுமி ரிம்சா மெஹ்ரின் (15), அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஆவார். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் செல்வதாகக் கூறி அவர் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தனர்.

சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ரிம்சா அன்று பள்ளிக்குச் செல்லவே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, முந்தைய நாள் சிறுமியை அவளது குடும்பத்தினர் கண்டித்ததாகச் சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதன் காரணமாக அவர் வீட்டை விட்டுச் சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துக் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
