திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி... சேகர்பாபு மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 
அன்பில் மகேஷ்

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு மீது இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ரூ.100 கோடி லஞ்ச மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பி.கே. சேகர்பாபு அங்கிருந்த உயர் அதிகாரிகளுடனும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆதவ் சேகர்பாபு

அரசு ஊழியர்களைச் சட்டப்பூர்வமாகப் பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் அதிகாரிகளை அவமரியாதையாகப் பேசுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வேப்பேரி காவல்துறையினர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேகர்பாபு அமைச்சர் ரமேஷ்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதைத் தொடர்ந்து, திமுகவின் மற்றொரு மூத்த தலைவரான பி.கே. சேகர்பாபு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.