தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... வீடு புகுந்து 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஊர்காவல்படை வீரர் கைது!

 
ஊர்க்காவல்ப்படை பாலியல் ஊர்க்காவல்ப்படை பாலியல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, வீட்டில் தனியாக இருந்த 11-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவியின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்த ஊர்காவல்படை வீரரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், காலை மாணவியின் பெற்றோர் வழக்கமான விவசாயக் கூலி வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். மாணவி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர், திடீரென வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஊர்காவல்படை வீரராகப் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

காப்பற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் சதீஷ்குமார், வீட்டில் தனியாக இருந்த அந்தப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்டு சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட மாணவி அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறியுள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், குற்றவாளியான ஊர்காவல்படை வீரர் சதீஷ்குமார் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக முயன்ற அவரைத் தனிப்படை அமைத்துத் தேடி, இன்று காலைக்குள் கைது செய்து சிறையிலடைத்தனர்.