தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... கல்லூரி மாணவியைக் கடத்தி மயக்க மருந்து தூவி வன்கொடுமை!

 
கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண் கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

தமிழகத்தில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி, தனது கல்லூரி ப்ராஜெக்ட் பணிக்காகச் சென்னை அடையாறில் உள்ள விடுதியில் தங்கி வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதலே அந்த மாணவியின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, மார்பிங் செய்யப்பட்ட அவரது ஆபாசப் புகைப்படங்களை அனுப்பி மர்ம நபர்கள் மிரட்டி வந்துள்ளனர். கடந்த மார்ச் 9-ம் தேதி, மாணவி வாடகை டாக்சிக்காகக் காத்திருந்தபோது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றுள்ளது. கார் உள்ளேயே மாணவி மீது மயக்கப் பொடியைத் தூவி, ஒரு மணி நேரம் கழித்து வேறொரு இடத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி, மார்ச் 10-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற போது தான் தான் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை உணர்ந்துள்ளார். இதைப் பற்றி வெளியே சொன்னால் புகைப்படங்களை இணையத்தில் விடுவோம் என அந்தக் கும்பல் மீண்டும் மிரட்டியுள்ளது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இது குறித்து கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் சைபர் கிரைம் உதவியுடன் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.