தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... ஆவின் கடைகளில் கர்நாடக நந்தினி நெய் விற்பனை!

 
ஆவின் நந்தினி நெய்

சேலத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான ஆவின் விற்பனை நிலையங்களில் கர்நாடக அரசின் 'நந்தினி' பிராண்ட் நெய் விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பாரம்பரியமான ஆவின் பாலகங்களிலும் விற்பனை நிலையங்களிலும் கர்நாடகாவைச் சேர்ந்த நந்தினி நெய் பாட்டில்கள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நந்தினி பால்

கடந்த ஒரு மாத காலமாகச் சந்தையில் ஆவின் நெய்க்குத் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டுக் கர்நாடகாவிலிருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுவதாகவும் விற்பனையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

உள்ளூர் தயாரிப்பான ஆவின் நெய் கிடைக்காமல், நேரடிப் போட்டியாக உள்ள வெளிமாநில அரசு நிறுவனத்தின் நெய் ஆவின் கடைகளிலேயே விற்பனை செய்யப்படுவது நுகர்வோர் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.