தவெகவில் அடுத்த அதிர்ச்சி... எம்.எல்.ஏ ராமுவுக்கு திடீர் மாரடைப்பு - ஐசியூவில் தீவிர சிகிச்சை!

 
தவெக எம்.எல்.ஏ ராமு

புதுச்சேரி மணவெளி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் ராமுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மணவெளி தொகுதியின் தவெக எம்.எல்.ஏவாகப் பதவி வகித்து வரும் ராமுவுக்கு, நேற்று மாலை திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு உருவாகியுள்ளதைக் கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்குள்ள ஐசியூ பிரிவில் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எம்.எல்.ஏ ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்த தவெக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஏற்கனவே மற்றொரு தவெக எம்.எல்.ஏவான வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.