அடுத்த அதிர்ச்சி... வெள்ளி விலை ரூ.5,000 உயர்வு.. ஜெட் வேகத்தில் எகிறும் வெள்ளி விலை!

 
வெள்ளி விலை தங்கம் வெள்ளி விலை தங்கம்

சென்னையில் கடந்த சில நாட்களாகக் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் வெள்ளியின் விலை, நேற்று சரிவைக் கண்டிருந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்துள்ளது நகைப்பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை ஏறுமுகமாக மாறியுள்ளது. நேற்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.285-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.5 உயர்ந்து ரூ.290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் ரூ.15,000 சரிந்து ரூ.2,85,000-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரூ.5,000 உயர்ந்து ரூ.2,90,000 ஆக விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளிச் சந்தையில் வரலாறு காணாத வகையில் விலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

வெள்ளி கொலுசு சோதனை

கடந்த மே 11-ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அடுத்த 10 நாட்களுக்குள் சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மற்றும் தொழில் துறைத் தேவைகள் காரணமாக, வெள்ளியின் விலை அதிகபட்சமாக ரூ.35,000 வரை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,20,000 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது.

வெள்ளி விலை தங்கம்

அதன் பின்னர், கடந்த சில தினங்களாக மீண்டும் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.2,90,000 என்ற நிலைக்கு வந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாகவே வெள்ளி விலையில் இந்த அளவுக்குத் தொடர் மாற்றங்கள் நீடித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.