அடுத்த அதிர்ச்சி... தமிழகத்தில் அடுத்த மாதம் மின் பற்றாக்குறை அபாயம்!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!! தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

தென் மாநிலங்களில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மின்சாரத்தின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக மத்திய மின் துறை தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை 69,934 மெகாவாட்டிலிருந்து 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதில் குறிப்பாக தமிழகம் 19,822 மெகாவாட் தேவையுடன் தென் மாநிலங்களிலேயே முதலிடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட (19,679 மெகாவாட்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் மின் தேவை அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் 17,162 மெகாவாட்டிலிருந்து 18,548 ஆகவும், ஆந்திராவில் 13,107லிருந்து 14,011 மெகாவாட்டாகவும் மின் தேவை உயர்ந்துள்ளது. அதேபோல் கர்நாடகாவில் 18,655 மெகாவாட்டாகவும், கேரளாவில் 5,844 மெகாவாட்டாகவும் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், புதுச்சேரியில் மட்டும் மின் தேவை 483 மெகாவாட்டிலிருந்து 476 மெகாவாட்டாகச் சற்று குறைந்துள்ளது.

மின்

தமிழகத்தில் மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த மாதம் (மே) முதல் மாலை நேரங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின் துறை எச்சரித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் மின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க மின் வாரியம் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.