தவெகவில் அடுத்த பரபரப்பு... அமைச்சர் வெங்கட்ரமணன் மீது மனைவி மீனாட்சி பரபரப்புப் புகார்... நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை வழக்கு!

 
வெங்கட்ரமணன்

அமைச்சர் வெங்கட்ரமணன் மீது அவரது மனைவி மீனாட்சி குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன், பல்வேறு பரபரப்புப் புகார்களையும் முன்வைத்துள்ளார். சைதாப்பேட்டை 17-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் வெங்கட்ரமணன்

செய்தியாளர்களிடம் பேசிய மீனாட்சி, "கடந்த மார்ச் மாதம் என்னைக் கருக்கலைப்பு செய்துவிட்டு வா என அடித்துத் துரத்திவிட்டார்; என்னை மிரட்டினார்" எனத் தெரிவித்துள்ளார். தனது 10 வயது பெண் குழந்தையைப் பிரிந்து இருப்பதாகவும், குழந்தை எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரம் எதுவும் தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அழைப்பதாகச் சொல்லி ஏமாற்றி விட்டதாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் எந்தப் பதிலும் இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

வெங்கட்ரமணன்

தற்போது வீடு எங்கு உள்ளது என்பது தெரியாத நிலையில், தமக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் மூலம் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் மீனாட்சி தெரிவித்துள்ளார்.