தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை... இன்று சென்னை உட்பட 29 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று அக்டோபர் 16ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 17: திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர் மற்றும் காஞ்சீபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
அக்டோபர் 18: நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பாக இருக்குமாறும், வானிலை மையம் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து நடக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
