பகீர் வீடியோ.... 7 குழந்தைகளை கொலை செய்த டெவில் நர்ஸ்!!

 
லூசி

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில்   கவுண்டஸ் ஆப் செஸ்டர்  மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில்  2015  முதல்  ஒரு வருட காலத்திற்கு பிறந்த குழந்தைகளின் உயிரிழப்பு அதிகமாக இருந்து வந்தது.  வழக்கத்துக்கும் அதிகமாக திடீர் உயிரிழப்பு, திடீர் உடல் நலக்குறைபாடு என தொடர்  சம்பவங்கள் நடந்தன.   இது குறித்த  புகாரின் அடிப்படையில் 2019ல் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.  அதே மருத்துவமனையில்  லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இதுபோன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து சாட்சியங்களாக பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து நர்ஸ் லூசி லெட்பி 2018ல் கைது செய்யப்பட்டார். இது குறித்த  வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.   நோய்வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொலை செய்துள்ளார். இதே போல்  7 குழந்தைகளை கொலை செய்த நர்ஸ் லூசி   லெட்பி சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் இவருக்கு உதவி உள்ளார்.

பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சமயத்தில்   குழந்தை நல மருத்துவராக  ரவி ஜெயராம் என்பவர் பணிபுரிந்தார்.   இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளி மருத்துவர்   ரவி ஜெயராம், நர்சு லூசி லெட்பி மீது சந்தேகத்தை எழுப்பி எச்சரிக்கையை தெரிவித்தார். அதன்பின் மருத்துவமனை   ஊழியர்கள் சிலரும் சந்தேகங்களை கூறினர். இதையடுத்து நர்ஸ் லூசி லெட்பியை கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து மருத்துவமனை  மருத்துவர்   ரவி ஜெயராம்  ''2015ல் 3  குழந்தைகள் இறந்த போது சந்தேகம் ஏற்படவில்லை. அடுத்தடுத்து   பல குழந்தைகள் இறந்ததால் நர்ஸ்  லூசி லெட்பி மீது சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.

லூசி

லூசி லெட்பி பற்றிய எச்சரிக்கைகளுக்கு   முன் கூட்டியே   நடவடிக்கை எடுத்திருந்தால் அதில் சில குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். அவை  ஒருவேளை பள்ளிக்கு செல்லும் வயதில் இருந்திருக்கும்.   7 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த  வழக்கு மற்றும் 6 குழந்தைளை கொலை செய்ய முயற்சி செய்ததாக தொடரபட்ட வழக்கில் நர்ஸ் லெட்பி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில் அவரை குற்றவாளி என மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். இவருக்கான   தண்டனை குறித்து திங்கட்கிழமை இறுதி செய்யப்படும் என அறிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web