தூய்மை பணியாளரின் மறுபக்கம்.. 9 ஆடம்பர கார்கள்.. பல சொகுசு வீடுகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

 
சந்தோஷ் குமார் ஜெய்ஸ்வால்

உத்தரபிரதேச மாநிலம் கோல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நகர் கோட்வாலி பகுதியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ் குமார் ஜெய்ஸ்வால். இவர் பணிபுரியும் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள முக்கிய கோப்புகள் அடிக்கடி காணாமல் போவதாகவும், அரசு தகவல்கள் கசிவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

காணாமல் போன அரசு கோப்புகளில் உள்ள தகவல்களை சரி செய்து, சந்தோஷ் குமார் ஜெய்ஸ்வால் ஏராளமான சொத்து குவித்ததாக கமிஷனர் யோகேஸ்வர் ராம் மிஸ்ராவிடம் புகார்கள் வந்ததால், அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் குமார் ஜெய்ஸ்வாலின் சொத்துக்கள் குறித்து விசாரணை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சந்தோஷ் குமார் மொத்தம் 9 சொகுசு கார்களை வைத்துள்ளார்.

இதுதவிர லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான  சொகுசு மற்றும் நவீன வசதிகளுடன் பல்வேறு வீடுகளும் சொந்தமாக உள்ளன. அவர் வைத்திருக்கும் சொகுசு கார்களின் விவரங்களை அனுப்புமாறு உள்ளூர் போக்குவரத்து அதிகாரிகளிடம் போலீசார் கேட்டுள்ளனர். 5 ஆண்டுகளாக அவரது வங்கிக் கணக்கில் செய்யப்பட்ட பணப் பரிமாற்ற விவரங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விசாரணை முடிவில் துப்புரவு பணியாளர் ஜெய்ஸ்வால் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா