நிலத்தை தராமல் ஏமாத்துறாங்க.. காவல் நிலையம் குடும்பத்துடன் தர்ணா...!

 
அவிநாசி காவல் நிலையம் முன் போராட்டம்
வீட்டுமனைக்கு முன்பணம் செலுத்திய பின் மனையை கிரையம் செய்யாமல் ஏமற்றி வந்த நில உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் முன்பு குடும்பத்தோடு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே எம். நாதம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்தாஸ் (42). இவர் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்யா (32). இவரது மகள் ஜெஸ்மி (12), மகன் பிரித்வ் (6). இவர் அதே பகுதியில் தனியார் அமைத்திருந்த வீட்டுமனை பிரிவுக்கு முன் பணம் செலுத்தியும், கிரையம் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அருள்தாஸ் தனது குடும்பத்தினருடன் அவிநாசி காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து அருள்தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Avanashi, Tiruppur : அவிநாசி: அவினாசிலிங்கம்பாளையத்தில் சாலைத்தடுப்பு மீது  மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மெக்கானிக் பலி - போலீஸ் விசாரணை ...

எம். நாதம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டு மனை பிரிவில் 47வது எண் கொண்ட வீட்டு மனையை பதிவு செய்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ரூ.4.50 லட்சம் பணம் செலுத்தினோம். ஆனால், வீட்டுமனை பிரிவு உரிமையாளர் இது வரை கிரையம் செய்து கொடுக்கவில்லை. இதற்கு மாறாக நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டதற்கு இரு முறையும் செல்லாத காசோலைகளை கொடுத்தார்.

நாங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக நாங்கள் செலுத்திய பணத்தையும் திருப்பி கொடுக்காமல், அந்த வீட்டுமனை பிரிவில் கிரையம் கொடுக்காமல் எங்களை ஏமாற்றுகின்றனர். ஆகவே, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து அவிநாசி காவல்துறை  பிரிவு உரிமையாளரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்களுக்குள் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் அருள்தாஸ் தர்ணா போராட்டத்தை கலைத்து விட்டுச் சென்றார்.

From around the web