“என் மனதில் ஆறாத ரணம்; தீராத வலி” - கரூர் துயரத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் முதல்வர் விஜய் இதய அஞ்சலி!

 
கரூர்

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலையும் இதய அஞ்சலியையும் தெரிவித்துள்ளார்.

கரூர்

"என் வாழ்விலும் கரூர் மற்றும் தமிழக உறவுகளின் மனதிலும் ஆறாத ரணமாகவும் தீராத வலியாகவும் அமைந்த நாள் இது" என்று முதல்வர் விஜய் தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கரூர்

"சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கும் நம் உறவுகளுக்கு ஆறுதலாகவும் அரணாகவும் நாமே இருப்போம்" என்று குறிப்பிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்து இதய அஞ்சலி செலுத்தியுள்ளார்.