வைரல் வீடியோ!! மாநகராட்சி அலுவலகத்தில் பாம்பை விட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய நபர்!!

 
பாம்பு

அரசு அலுவலகங்களை பொறுத்தவரை உடனே வேலை நடந்து விடாது என்ற புலம்பல் அனைத்து தரப்பு மக்களிடமும் பார்க்கலாம். இதற்காக பலர் சிபாரிசுகளை முன்வைத்தும் , கெஞ்சிக் கூத்தாடி காரியங்களை ஆகப்பண்ணிக் கொள்வர். இதே கூத்து தான் இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் எல்லாம் என சலித்து கொள்கின்றனர் பொதுமக்கள் . அந்த வகையில் தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகவே தொடர்மழை பல்வேறு நகரங்களில்  பெய்து வருகிறது.


 

இதனால், பல இடங்களில் மழை வெள்ளநீர் புகுந்து   வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.  இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் ஆல்வால் பகுதியில் வசித்து வருபவர்   வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து உள்ளது. இதனை பிடித்து  கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி வார்டு அலுவலகத்திற்கு சென்று அதனை விட்டுள்ளார்.  இது குறித்த   வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில்  மேஜை ஒன்றின் மீது பாம்பு சற்று நேரம் அமைதியாக காணப்படுகிறது. அதன்பின்பு, மெதுவாக ஊர்ந்து செல்கிறது. அதில், நபர் ஒருவர் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறுகிறார்.

பாம்பு

மற்ற தகவல்கள் அறியும் படி அதில் இல்லை.  அரசு அலுவலகத்தில் புகார் கொடுத்து பல நாட்கள் ஆகியும் எதுவும் கண்டு கொள்ளாததால்  ஆத்திரத்தில் அந்த நபர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளார் என கூறப்பட்டுள்ளது இருந்த போதிலும் இச்சம்பவம் குறித்த  விவரங்களை அரசு அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web