பகீர்... மொபைல் ஹாட்ஸ்பாட்டை பகிர மறுத்த நபர் படுகொலை!

 
ராமச்சந்திரா


இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்  புனேவில் செல்போன் ஹாட்ஸ்பாட்டை பகிர மறுத்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தில் வசித்து வருபவர்  ராமச்சந்திரன் குல்கர்னி. இவர் நிதி நிறுவன ஏஜெண்ட்டாக பணிபுரிந்து  வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  

ஹாட் ஸ்பாட்


அப்போது, அடையாளம் தெரியாத 4 இளைஞர்கள் அவரை வழிமறித்து மொபைல் ஹாட்ஸ்பாட்டை பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தினர்.  ஆனால் அவர் ஹாட்ஸ்பாட்டை பகிர மறுத்துவிட்டார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

ராமச்சந்திரா


இதனால்  ஆவேசம் அடைந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திர குல்கர்னியை சராமாரியாக குத்தினர். அலறித்துடித்து ராமச்சந்திர குல்கர்னி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.  கொலை செய்த இளைஞர்கள் அங்கிருந்த தப்பிச் ஓடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மயூர் மோசாலே என்ற இளைஞரையும் 3 சிறுவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web