உயர் அதிகாரியை போட்டு தள்ள பக்கா பிளான்.. ரூ.45,000 கொடுத்து கூலிப்படை ஏவிய பெண் அதிகாரி!

 
காவ்யா

ஈரோடு மாவட்டம், பவானி நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் நாமக்கல் காடவீதி பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வங்கியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நாமக்கல்லில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அதே வங்கியில் கரூரைச் சேர்ந்த காவ்யா (32) உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வசித்து வருகிறார்.

வங்கியில் மேலாளர் கொடுக்கும் வேலையை காவ்யா முறையாக பணி செய்வதில்லை என கூறப்படுகிறது. இதை மேலாளர் கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் வங்கி மேலாளர் பல ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் பெற்றுள்ளார். இதனால் மற்ற ஊழியர்களும் வங்கி மேலாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் காவ்யா தன்னை யாரும் மதிப்பதில்லை என மனமுடைந்துள்ளார். இதற்கு காரணம் வங்கி மேலாளர் தான் என சொந்த ஊருக்கு சென்று உறவினர்களிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி மதியம், சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று வங்கிக்கு திரும்பிய மேலாளர் கோபிநாத்தை, 2 பேர் வழிமறித்து சரமாரியாக வெட்டினர். பலத்த காயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் உதவி மேலாளர் காவ்யா கூலிப்படையாக நியமித்து மேலாளர் கோபிநாத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வங்கி மேலாளர் கொடுத்த வேலையை காவ்யா சரியாக செய்யவில்லை. இதனால் அவருக்கு வேறு பணி கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் அவர் சரியாகச் செய்யவில்லை. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த காவ்யா, மேலாளரை தீர்த்து கட்ட கரூரில் உள்ள தன் உறவினர்களின் உதவியை கேட்டுள்ளார். அதன்படி, 3 கூலித்தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். கூலிப்படையினருக்கு 45,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லுக்கு வேனில் வந்து வங்கி இருக்கும் இடம், மேலாளர் வீட்டிற்கு செல்லும் நேரம், திரும்பும் நேரம் ஆகியவற்றை கண்காணித்து வந்துள்ளனர். கூலிப்படையினருக்கு கோபிநாத்தின் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார் காவ்யா. மேலும், கூலிப்படையினர் வாடிக்கையாளர்களாக வங்கிக்கு வந்து மேலாளரை நேரில் பார்த்துவிட்டு சென்றனர்.

இதையடுத்து, கடந்த 18ம் தேதி மதியம், வீட்டில் இருந்து வங்கிக்கு திரும்பிய கோபிநாத்தை, 2 பேர் கத்தியால் சரமாரியாக வெட்டினர். மற்ற 2 பேரும் யாரும் அருகில் வராமல் பார்த்துக் கொண்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் உதவி மேலாளர் காவ்யா, அவரது சித்தப்பா சிவக்குமார் (38), கூலித்தொழிலாளி செல்லீஸ்வரன் (40), பார்த்திபன் (34), தினேஷ் (34) ஆகியோரை போலீசார் கைது செய்து நேற்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

குற்றவாளிகளை அடையாளம் காண அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலாளர் கோபிநாத், சிகிச்சை முடிந்து திரும்பியதும் அடையாள அணி வகுப்பு நடத்தப்படும் என்றார். நாமக்கல்லில் உள்ள பிரபல வங்கி மேலாளரை சரி செய்ய பெண் உதவி மேலாளர் கூலி ஆளை நியமித்த சம்பவம் வங்கி அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web