WWE ரிங்கிற்குள் ஸ்பீடை பறக்க விட்ட வீரர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஐஷோஸ்பீட் எனப்படும் டேரன் ஜேசன், உலகப் புகழ்பெற்ற யூடியூபர். அவர் சமீபத்தில் WWE ராயல் ரம்பிள் 2025 இல் பங்கேற்றார். போட்டியாளர் அகிரா டோசாவா களம் இறங்க முடியாதபோது, அவருக்குப் பதிலாக யூடியூபர் ஜேசன் ரிங்கிற்குள் இறக்கிவிடப்பட்டார். ஒரு ஆச்சரியமான நடவடிக்கையில் ரிங்கிற்குள் நுழைந்த ஜேசன், பிரோன் பிரேக்கருக்கு ஓடிஸ் - ஐ வெளியேற்ற உதவினார்.
no more WWE💔 pic.twitter.com/iOb9xDGKGs
— Speed⭐️ (@ishowspeedsui) February 2, 2025
ஓடிஸ் வெளியேற்றப்பட்ட அடுத்த கணம், பிரோன் பிரேக்கர் ஜேசனை நோக்கி திரும்பி, ஸ்பியர் ஷாட்டை பயன்படுத்தி பறக்க விட்டார். ஜேசனை தூக்கி அவர் நிகழ்த்திய ருத்ர தாண்டவத்தால் ஜேசன் பலத்த காயமடைந்தார். இறுதியில், ஜேசன் நிற்க ஊன்றுகோல்களைப் பயன்படுத்த வேண்டிய ஒரு பரிதாபகரமான சூழ்நிலையில் இருந்தார். ஜேசன் தனது வாழ்க்கையில் மீண்டும் ஒருபோதும் WWE பக்கத்தில் தலை வைத்து படுக்க மாட்டேன் என்று சபதம் செய்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!