காளை சண்டையில் தூக்கி வீசப்பட்ட வீரர் கவலைக்கிடம்!

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை போல் மெக்சிகோவில் காளை சண்டை உலகப் பிரசித்தி பெற்றது. மிகப்பெரிய ஆடுகளம் ஒன்றில் நன்கு பயிற்சி பெற்ற வீரர் ஒருவர் கையில் துணியுடன் நின்றிருப்பார். அந்த துணியில் காளைக்கு ஆவேசம் ஏற்படும். இந்தக் களத்திற்குள் காளை ஒன்று அவிழ்த்து விடப்படும்.அந்த காளைக்கு ஆத்திரமூட்டும்படி வண்ணத் துணியை தன்முன் திரையாக காட்டியபடி அந்த வீரர் நிற்பார்.
பயிற்சி பெற்ற வீரர் லாவகத்துடன் அதனை தடுத்து விடுவார். அவர் மீது முட்டிவிடாதபடிக்கு அதனை பிடித்துக் கொண்டு நிற்பார். அந்தவகையில் மெக்சிகோ நாட்டின் லக்ஸ்காலா மத்திய மாகாணத்தில் காளை சண்டை நடைபெற்றது. இதில், ஜோஸ் ஆல்பர்டோ ஆர்டிகா என்பவர் ஆடுகளத்தில் மண்டியிட்டபடி கையில் துணியுடன் காளைக்காக காத்திருந்தார். அப்போது விலகுவதற்குள் துணியுடன் அவரையும் சேர்த்து முட்டி சென்றது. இதில், ஆல்பர்ட்டோவின் கழுத்து பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. காது, வாய் பகுதி, தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
காளை முட்டியதும் தூக்கி வீசப்பட்டு சிறிது நேரத்திற்கு எழுந்து களத்தில் இருந்து நடந்து வெளியேறினார். ஆனால், அதன்பிறகு சரிந்த அவரை உடனிருந்தவர்கள் உடனடியாக தூக்கி சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை நடைபெற்று உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட கூடிய நிலை காணப்படுகிறது என மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில், காளை சண்டையில் கலந்து கொண்ட வீரர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!