தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு.... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,05,600 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.6,120 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் தங்கத்தின்

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு வருவது சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,900-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கும் விற்பனையாகிறது.

தங்கம்

அதேபோன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து தற்போது ஒரு சவரன் ரூ.1,11,720 என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்வதால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தங்களது நகை வாங்கும் கனவைத் தள்ளிப்போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றங்களே தங்க விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.