மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கைதி.. கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடியதால் பரபரப்பு..!
Oct 23, 2023, 20:10 IST

மதுரையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, வலிப்பு நோய் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் திருட்டு வழக்கில் பால்பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். பின் அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் பால்பாண்டிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு சிகிச்சை கொடுப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.இந்தநிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து பால்பாண்டி தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அவரை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
From around the
web