ஓயாத கடன் பிரச்னை.. விரக்தியில் வயதான தம்பதி எடுத்த விபரீத முடிவு!

 
முதலைப்பட்டி தற்கொலை

கடன் பிரச்னையால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் குணசேகரன் (58). இவருக்கு சந்திரகலா (52) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

பள்ளி மானவி தற்கொலை

இதனால் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரும் வீட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடன் பிரச்னையால் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்னையால் வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web