துணை ஜனாதிபதி தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடக்கம்... தேர்தல் அலுவலர் நியமனம் !

 
தேர்தல் ஆணையம்
 


 

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்  ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  ஜனாதிபதியிடம்  முன் அனுமதி எதுவும் பெறாமல் திடீரென சந்தித்து அவர் பதவி விலகியது இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அவரது பதவி விலகலுக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  

திரௌபதி முர்மு
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை ஜனாதிபதி முர்மு ஏற்றுக் கொண்டதை  மத்திய உள்துறை அமைச்சகம் முறைப்படி அறிவித்தது. இதுகுறித்து  உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் கையெழுத்திட்ட அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. மேலும், இது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்களுக்கும்  தெரிவிக்கப்பட்டது. 

பதவியேற்றார் ஜக்தீப் தன்கர்
புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன.  துணை ஜனாதிபதி தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்தது. மாநிலங்களவை செயலாளர் பிரமோத் சந்திரா மோடி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை இணைச் செயலாளராக கரீமா ஜெயின், மாநிலங்களவை இயக்குனர் விஜயகுமார் உதவி தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.