கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்... பயிற்சி மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு!

 
பயிற்சி மருத்துவர்

 மேற்கு வங்காளத்தின்  தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ர்ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  இதில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண்டாக்டர் ஒருவர், ஆகஸ்ட் 9ம் தேதி  கொடூர கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.  அரை நிர்வாணகோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் 23ம் தேதி வரை  போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

பயிற்சி மருத்துவர்

 இதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த போராட்டம் நேற்று 2வது நாளாகவும் நீடித்தது. டாக்டர்கள் கூட்டமைப்பில் ஒரு பிரிவினர் போராட்டம் வாபஸ் பெறப்படும் என அறிவித்தனர்.  இந்நிலையில், மராட்டிய பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பு தொடர்ந்து போராடுவது என முடிவு செய்துள்ளது. எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த முடிவு உறுதியானது. எங்களுடைய கோரிக்கைகள் திருப்தி ஏற்படும் வகையில் நிறைவேறும் வரை அதனை நிறுத்த போவதில்லை என்று அவர்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

மருத்துவர்கள்

தெற்கு பீகாரின் பெரிய அரசு மருத்துவமனையான அனுகிரக நாராயண்மகத் மருத்துவ கல்லூரியின் மருத்துவர்களும், அகர்தர்லா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாமின் கவுகாத்தி மருத்துவ கல்லூரியின் இளநிலை மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 3வது நாளாக போராட்டம் தொடரும் என கூறப்படுகிறது. இன்று ஆகஸ்ட் 14ம் தேதி புதன்கிழமை மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மகாராஷ்டிரா பயிற்சி டாக்டர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா