பொதுமக்கள் கவலை... குறைந்த வருவாய் ஈட்டும் அரசுப் பேருந்து சேவைகளை நிறுத்த முடிவு!

 
பேருந்து

தமிழ்நாடு முழுவதும் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில், குறைந்த வருவாய் ஈட்டும் அரசுப் பேருந்து சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தப் போக்குவரத்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

பேருந்து இயக்கத்தின் மூலம் அரசுக்கு ஏற்படும் டீசல் செலவைக் குறைக்கவும், அதே நேரத்தில் ஒட்டுமொத்த வருவாயை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட நடவடிக்கையாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்த 136 புறநகர்ப் பேருந்து சேவைகள் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

விடுமுறை பேருந்து சொந்த ஊர் கிளாம்பாக்கம்  கூட்டம் பண்டிகை திருவிழா

ஏற்கனவே பல நகரப் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலித்து வரும் நிலையில், அரசுப் பேருந்துகள் குறைக்கப்படுவது மக்களுக்குக் கூடுதல் நிதிப் சுமையை ஏற்படுத்தும் எனப் பயணிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்துத் துறை என்பது லாப நஷ்டத்தைப் பார்க்கும் வணிகத் துறை அல்ல; அது சாமானிய மக்களுக்கான சேவைத் துறை. எனவே, லாப நோக்கத்திற்காக மட்டுமே பேருந்து சேவைகளைக் குறைப்பது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.