“கொள்முதல் விலை போதாது.. தனியாருக்கு பால் ஊற்றும் நிலை ஏற்படும்” - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை!

 
பால்

ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைய விலை உற்பத்தியாளர்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்றும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தனியாருக்கு பால்வழங்கும் சூழல் உருவாகும் என்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 35-ல் இருந்து ரூ. 45-ஆகவும், ஊக்கத்தொகையை ரூ. 3-ல் இருந்து ரூ. 10-ஆகவும் உயர்த்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதனைக் பரிசீலித்த அரசு, கொள்முதல் விலையைச் சில கட்டங்களாக உயர்த்தி தற்போது ரூ. 44-க்கு கொள்முதல் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

'ஆவின் பால்

கூட்டுறவு சொசைட்டிகளில் பால் ஊற்றும் போது நிர்வாகச் செலவுக்காக லிட்டருக்கு ரூ. 1.25 வரை பிடித்தம் செய்யப்படுவதால், இறுதிப் பயனான உற்பத்தியாளருக்குக் கையில் ரூ. 42.75 மட்டுமே கிடைப்பதாகச் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முனுசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில் இந்த விலை போதுமானதாக இல்லை எனவும், உரிய விலை நிர்ணயிக்கப்படாவிட்டால் ஆவின் விவசாயிகளுக்குப் பதிலாகத் தனியார் நிறுவனங்களுக்குப் பால் ஊற்றும் சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.